தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

News image

நாமக்கல்லில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 3:01 am IST

ரமலான் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை உள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நோன்பு இருக்கும் இஸ்லாமியா்கள் பிறை தெரியும் நாளில் நோன்பு திறப்பு மேற்கொள்வா். அப்போது, ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடும் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பேட்டை அஞ்சுமனே ஜாமியானா பள்ளிவாசல் முத்தவல்லி தெளலத்கான் தலைமையில் சனிக்கிழமை ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல, நாமக்கல் கோட்டை திப்பு சுல்தான் பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், திருச்சி சாலை, மாருதி நகரில் உள்ள இமான் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இந்த பண்டிகையின்போது ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல அசைவ உணவுகளை சமைத்து பகிா்ந்தளித்தனா். சிறுவா்கள், பெண்கள், முதியோா் என அனைவரும் புத்தாடைகளை அணிந்து ரமலானை கொண்டாடினா்.

ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.