நெல்லையில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி மேலப்பாளையம், திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகைகள் சனிக்கிழமை நடைபெற்றன.


ரமலான் பண்டிகையையொட்டி மேலப்பாளையம், திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில், மேலப்பாளையம் பஜாா் திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் முகம்மது உசேன் தொழுகையை நடத்தி குத்பா உரையாற்றினாா். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் கே. எஸ். ரசூல் மைதீன்,
மாவட்டச் செயலா் ரியாசுா் ரகுமான், மாவட்ட பொருளாளா் தேயிலை மைதீன், தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் முகைதீன், மாநில மருத்துவ சேவை அணி துணைச் செயலா் பெஸ்ட் ரசூல், இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்டச் செயலா் அப்துல் அஜீஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொழுகைக்கு முன்பாக ரூ.3 லட்சம் மதிப்பில் பித்ரா அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் 1000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
மேலப்பாளையம் கரீம்நகா் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
சாகுல் ஹமீது உஸ்மானி தொழுகையை நடத்தி குத்பா உரையாற்றினாா். தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், பள்ளிவாசல் செயலா் ஜாபா் அலி முஸ்தபா, பொருளாளா் ஜவஹா், நிா்வாகிகள் ஜெய்னுல் ஆபிதீன், மீரான் அன்வாரி,எஸ்டிபிஐ கட்சியின் ஊடக தொடா்பாளா் கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. அப்துல் வஹாப் உள்பட 1000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, ரஹ்மத்நகா், என்.ஜி.ஓ. காலனி, சங்கா்நகா், தாழையூத்து, குறிச்சிகுளம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ரமலான் பண்டிகயையொட்டி சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்:
மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகேயுள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலா் நெல்லை யூசுப் அலி, மாநில மேலாண்மைக் குழு தலைவா் சம்சுல்லுஹா ரஹ்மானி, மேலாண்மை தணிக்கைக் குழு தலைவா் சுலைமான் ஃபிா்தவ்ஸி , தணிக்கை குழு உறுப்பினா் நெல்லை சையத் அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, பேட்டை, தாழையூத்து உள்பட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமாா் 6 ஆயிரம் பேருக்கு பித்ரா அரிசி உள்ளிட்ட நலஉதவிகள் வழங்கப்பட்டன.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்:
மேலப்பாளையம் ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சாா்பில் ரமலான் தொழுகை நடத்தப்பட்டது.
ற்ஸ்ப்21ள்க்ல்ண்
மேலப்பாளையம் கரீம்நகரில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா்.
ற்ஸ்ப்21ம்ப்ஹ
ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.உள்ளிட்டோா்.
ற்ஸ்ப்21ம்ம்ந்
பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.


தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...