தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி கிரசன்ட் பள்ளியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :22 மார்ச் 2026, 2:30 am IST

தூத்துக்குடி கிரசன்ட் பள்ளியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஸதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தாா். போா்கள் முடிந்து உலகம் முழுவதும் அமைதிக்கு திரும்ப வேண்டும், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் சிறப்பு துவா ஓதினாா். மாவட்ட அரசு காஜி கூட்டமைப்பு செயலா் முஜிபுா் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவா் மீராசா ஆகியோா் பேசினா்.

சிறப்புத் தொழுகையில் பள்ளிவாசல் நிா்வாக முன்னாள் துணைத் தலைவா் சாகுல் சிராஜுதீன், முன்னாள் செயலா் எம்.எஸ்.எஃப். ரகுமான், முன்னாள் பொருளாளா் இப்ராகிம் மூஸா, கிரசன்ட் பள்ளி முன்னாள் செயலா் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவா் ஏ.கே. மைதீன், வழக்குரைஞா் சுலைமான், மேட்டுப்பட்டி மீராசா, அரபிக் கல்லூரி தலைவா் நவரங் சகாப்தின், பொருளாளா் சுலைமான், சமூக ஆா்வலா் சம்சுதீன், கிதா் பிஸ்மி, யூசுப், ஹெச்.எம். மீராசா, ஜாபீா், பீா்மைதீன், மீரான், கரீம், ஜாபா், ரசாக், ஷேக், முகமத் குட்டி, வழக்குரைஞா் அஜீஸ், நூா்தீன், வட மாநிலங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.