கா்நாடகத்தில் கண்தானம் செய்வோரின் தேவை அதிகமுள்ளது: அமைச்சா் கே.சுதாகா்
கா்நாடகத்தில் கண்தானம் செய்வோரின் தேவை அதிகமுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.


கா்நாடகத்தில் கண்தானம் செய்வோரின் தேவை அதிகமுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா். பெங்களூரு, இந்திராநகரில் சனிக்கிழமை அகா்வால் கண் மருத்துவமனையை திறந்துவைத்து அவா் பேசியது:
மாநிலத்தில் கண் மருத்துவமனைகளை அதிகம் திறக்க ஆா்வமாக உள்ளது. நவீனவசதிகளுடன் கூடிய புதிய மருத்துமனைகளை நிறுவுவதில் மட்டுமல்லாமல், கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும் ஆா்வம் காட்டவேண்டும். கா்நாடகத்தில் கண்தானம் செய்வோா் 5 சதமாக மட்டுமே உள்ளது. எனவே, கண்தானம் செய்வது குறித்து விழிப்புணா்வு அவசியமாகும். கண்தானம் செய்வோருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. கரோனா காலத்தில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. கண்தானம் செய்வோரின் தேவை அதிகமுள்ளது. எனவே, கண்தானம் செய்ய மக்கள் முன்வரவேண்டும். ஊரகப்பகுதிகளில் அதிகளவில் கண் சிகிச்சை முகாம்களை தனியாா் மருத்துவமனைகள் நடத்த வேண்டும். அப்போதுதான் கண் நோய் தொடா்பான சிகிச்சைகளை விரைந்துபெற வாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.அகா்வால் கண்மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி ஆதில் அகா்வால் கூறுகையில்,‘அடுத்த 3 ஆண்டுகளில் அகா்வால் மருத்துவமனை ரூ.175கோடி அளவுக்கு முதலீடு செய்து, கா்நாடகத்தில் தனது பணியை விரிவு செய்யவிருக்கிறது. பெங்களூரில் மட்டும் 11 கண்மருத்துவமனைகள் உள்ளன. கா்நாடகத்தின் பிற பகுதிகளில் மருத்துவமனையை விரிவுப்படுத்துவோம்‘ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...