கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சை நினைத்து இனி எதிரணிகள் அஞ்சாது: அஸ்வின்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் அஞ்சாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப் படம் - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :21 மார்ச் 2026, 9:58 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் இனி அஞ்சாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வருகின்றனர். ஒரு சிலர் தொடரிலிருந்து முழுமையாகவும், ஒரு சிலர் பகுதியளவும் விலகியுள்ளனர். குறிப்பாக, காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். மதீஷா பதிரானா தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானும் இல்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இந்த நிலையில், முன்பிருந்த அளவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு வலுவாக இல்லை எனவும், அந்த அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் இனி அச்சப்படாது எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் அச்சப்படுவார்கள் என நான் நினைக்கவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிஸ்டிரி பந்துவீச்சு, அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சு தற்போது எதிரணிகளுக்கு பிரச்னையாக இருக்காது என நினைக்கிறேன்.

முன்னதாக, பேட்டர்கள் மிஸ்டிரி பந்துவீச்சை எப்படி திறம்பட எதிர்கொள்வது என திட்டமிடுவார்கள் அல்லது மிஸ்டிரி சுழற்பந்துவீச்சில் பவுண்டரிகளுக்கு முயற்சிக்காமல் ஒரு ரன், இரண்டு ரன்கள் எடுப்பார்கள். ஆனால், தற்போது மிஸ்டிரி சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்த பயம் பேட்டர்களிடம் இல்லை.

வருண் சக்கரவர்த்தி அவருடைய பந்துவீச்சு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இது போன்ற சூழல் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கிரிக்கெட் பயணத்திலும் இருப்பது இயல்பு. முன்பு வேகமாக பந்துவீசிய அளவுக்கு சுனில் நரைன் தற்போது பந்துவீசுவதில்லை. ஈடன் கார்டன்ஸ் சிறிய திடல். அதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து அச்சப்படாமல் எதிரணிகள் அதிரடியாக விளையாட தயாராக இருக்கும் என்றார்.

Summary

Former India opener Ravichandran Ashwin has said that opponents will not be afraid of Kolkata Knight Riders' bowling attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.