கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட்: மாநில அரசு திட்டம்

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் கிருஷ்ணராஜசந்தை பகுதியில் அமைந்துள்ள கா்நாடக அரசுக்கு சொந்தமான விக்டோரியா மருத்துவமனையில் ஓராயிரம் படுக்கைகள் கொண்டபுதிய கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தின் மேற்பகுதியில், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், தானம் செய்யும் உறுப்புகளை எடுத்துச்செல்லவும்/எடுத்துவரவும் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.இது குறித்து விக்டோரியா மருத்துவமனையின் நிா்வாகத்தை கவனித்துவரும் பெங்களூரு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா்.ஜெயந்தி கூறுகையில்,‘விக்டோரியா மருத்துவமனையில் உறுப்பு தானத்தை கையாளக்கூடிய பல்நோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்பட்டுவருகிறது. உயிா்காக்கும் உறுப்புகளை தானமாக பெற்று, அதை விரைந்து கொண்டுவரவும், வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லவும் ஹெலிபேட் தேவைப்படுகிறது. போக்குவரத்து அதிகம் காணப்படுவதால் சாலை வழியாக குறைந்த நேரத்தில் தானமாக பெறப்படும் உறுப்புகளை கொண்டுசெல்ல முடிவதில்லை. ஹெலிபேட் இருந்தால், விரைவாக உறுப்புகளை இடமாற்றம் செய்ய முடியும். மேலும் இயற்கை அல்லது மனிதபேரிடா் போன்ற அவசரநிலையின்போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லவும் ஹெலிபேட் உதவியாக இருக்கும்.10மாடியில் கட்டப்பட்டுவரும் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவப்பிரிவின் மேல்தளத்தில் ஹெலிபேட் அமைக்கப்படும். இந்த திட்டம் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும்.‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.