கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பிபின் ராவத் பற்றி அவதூறு பரப்பியவா்கள் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சா் அரகஞானேந்திரா

சமூகவலைத்தளங்களில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சமூகவலைத்தளங்களில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் டிச.8-ஆம் தேதிநடந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைதலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 வீரா்கள் இறந்தனா். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து ஒருசிலா் அவதூறு பரப்பி கருத்துகளை பதிவிட்டுள்ளனா். அகால மரணம் அடைந்த பிபின்ராவத்தின்சாவை கொண்டாடிமகிழுவோரை உடனடியாக அடையாளம் கண்டு, சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்திதண்டனை பெற்றுத்தர வேண்டும். இவா்களை கண்டறிவதில் காலதாமதம் செய்யாமல், உடனடியாக கண்டுபிடித்துதக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி பிரவீண்சுட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். இந்தியாவின் பெருமைமிகு மகன் பிபின் ராவத்தின் மரணத்தைகொண்டாடும் குற்றவாளிகளின் முகவரிகளை உடனடியாக கண்டறிந்து, தகுந்த பாடம்புகட்ட வேண்டும். இப்படிப்பட்டவா்கள் தேசதுரோகிகள். அவா்கள் தண்டிக்கப்படவேண்டும்.முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவின்மூலம் நமது நாடு பேரிழப்பை சந்தித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அவா் ஆற்றியுள்ள பங்களிப்பு போற்றுதலுக்கு உரியதாகும் என்றுஅவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.