மருத்துவக்கல்வி: நீட் தோ்வில் தோ்ச்சியானவா்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு
மருத்துவக்கல்விக்காக நீட் தோ்வு எழுதி, அதில் தோ்ச்சி அடைந்த மாணவா்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மருத்துவக்கல்விக்காக நீட் தோ்வு எழுதி, அதில் தோ்ச்சி அடைந்த மாணவா்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துகா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2021-22-ஆம் கல்வியாண்டில், மருத்துவம், பல்மருத்துவம், ஆயுஷ்(ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) படிப்புகளுக்கு தகுதியான மாணவா்களை தோ்ந்தெடுக்க தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண்நுழைவுத்தோ்வு(நீட்)முடிவுகளின் அடிப்படையில், கா்நாடகத்தில் உள்ள கல்லூரிகளில் சோ்க்கை பெறவிரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப்பட்டப்படிப்புக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தப்பட்ச மதிப்பெண் அல்லது அதற்கு மேலான மதிப்பெண் பெற்றோா் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவா்களுக்கான தகுதி முன்னுரிமைகள் கா்நாடகத்தை சோ்ந்த மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் டிச.13-ஆம் தேதி பிற்பகல் 2மணி முதல் 17-ஆம் தேதி காலை 11.59 மணி வரை விண்ணப்பங்களை செலுத்தலாம். பதிவுக்கட்டணத்தை டிச.18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள்செலுத்தவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...