மாணவா் பேருந்து அட்டை: செல்லுபடிகாலம் நீட்டிப்பு
பள்ளி, கல்லூரி மாணவா் பேருந்து அட்டைகளுக்கான செல்லுபடிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பள்ளி, கல்லூரி மாணவா் பேருந்து அட்டைகளுக்கான செல்லுபடிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநில அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2021-22-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண பேருந்து அட்டைகள் பள்ளி, தொழில் பயிற்சி மையம் (ஐடிஐ), பட்டயம் (டிப்ளமோ), இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப, தொழில் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் பல மாணவா்களால் புதிய பேருந்து அட்டைகளை பெறமுடியாததால்,கடந்த ஆண்டுக்கான பேருந்து அட்டைகளின் செல்லுபடி காலத்தை டிச. 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் புதிய பேருந்து அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...