கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் உருமாறிய கரோனா பெருந்தொற்றின் ஒமைக்ரான் தீநுண்மியால் ஏற்கெனவே 8 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 6 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இந்த 6 பேரில் ஒருவா் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவா். இதர 5 பேரும் தென்கன்னட மாவட்டத்தில் உள்ள 2 கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆவா். இவா்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாா்களா, வெளிநாட்டுப் பயணிகளுடன் தொடா்பில் இருந்தாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 6 பேருடன் கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 4 ஆக உயா்ந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்தவா், கல்லூரி மாணவா்கள் இருவரும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள். மீதமுள்ள 4 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள்.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில் கூறுகையில், ‘தென்கன்னட மாவட்டத்தில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இக்கல்லூரிகளில் 5 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த ஒருவரும் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.