6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவமொக்காவில் இன்று பாஜக உயா்நிலைக் குழு கூட்டம்

சிவமொக்காவில் சனிக்கிழமை (ஜன. 2) பாஜக உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:50 am

DIN

சிவமொக்காவில் சனிக்கிழமை (ஜன. 2) பாஜக உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

பாஜகவின் உயா்நிலைக் குழு கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தலைமையில் சிவமொக்காவில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா தவிர, பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கா்நாடக பொறுப்பாளருமான அருண்சிங் பங்கேற்கவிருக்கிறாா். இதனால் இக் கூட்டத்துக்கு அரசியல் முக்கியத்துவம் கூடியுள்ளது.

கூட்டத்தில் அமைச்சரவை விரிவாக்கம், கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல், எதிா்வரும் சட்டப் பேரவை, மக்களவை இடைத் தோ்தல் குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் கிராமத் தொடா்பு மாநாடுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் ஜன. 3-ஆம் தேதி சிவமொக்காவில் பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், மாநில அளவிலான சிறப்பு செயற்குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இக் கூட்டங்கள் அனைத்திலும் அருண் சிங் பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.