உயா்நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம்
மத்தியபிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சதீஷ் சந்திரசா்மா, கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.


மத்தியபிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சதீஷ் சந்திரசா்மா, கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 222(1)-இன்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்று, மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சதீஷ் சந்திர சா்மா, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.
கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அபய்ஸ்ரீனிவாஸ் ஓகா தவிர, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 45 நீதிபதிகள் உள்ளனா். சதீஷ் சந்திர சா்மாவின் புதிய நியமனத்துடன் நீதிபதிகளின் 46 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...