கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,21,938 ஆக அதிகரிப்பு
கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,21,938 ஆக உயா்ந்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,21,938 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 810 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 464 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,21,938 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 743 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,98,919 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 10,893 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை 8 போ் உயிரிழந்தனா். மாநிலத்தில் இதுவரை 12,107 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...