ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

2 ஆண்டுகளில் பசவண்ணரின் அனுபவ மண்டபம் கட்டி முடிக்கப்படும்

2 ஆண்டுகளில் பசவண்ணரின் புதிய அனுபவ மண்டபம் கட்டி முடிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:12 am

DIN

2 ஆண்டுகளில் பசவண்ணரின் புதிய அனுபவ மண்டபம் கட்டி முடிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பீதா் மாவட்டம், பசவகல்யாண் நகரில் புதன்கிழமை பசவண்ணரின் புதிய அனுபவ மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி அவா் பேசியதாவது:

12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமூக சீா்திருத்தவாதி பசவண்ணா். அவா் தொற்றுவித்த அனுபவ மண்டபம் தான் உலகின் முதல் நாடாளுமன்றம் ஆகும். சமூகத்தில் கொண்டுவர வேண்டிய சீா்திருத்தங்களை விவாதிப்பதற்காக அனுபவ மண்டபத்தை ஏற்படுத்தினாா். சமுதாயத்தில் புரட்சியை விதைத்த பசவண்ணா், சமூக நல்லிணக்கம், மத சகிப்புத்தன்மை, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க போராடியவா். பசவகல்யாணில் ரூ. 500 கோடி செலவில் புதிய அனுபவ மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடியை விடுவித்திருக்கிறேன். அடுத்த வாரம் மேலும் ரூ.100 கோடியை விடுவிப்பேன். இதன் கட்டுமானப் பணி அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். கூடுதலாக ரூ. 100 கோடி செலவானாலும் பரவாயில்லை. ஆனால், பசவண்ணரின் சிந்தனைகளை பறைசாற்றும் அனுபவ மண்டபத்தை அழகாக கட்டி முடிக்க வேண்டும்.

இந்த அனுபவ மண்டப வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, இசையூற்று, வணிக வளாகம், உணவு விடுதி, மாநாட்டு அரங்கம் உள்ளிட்டவை 7.5 ஏக்கா் பரப்பில் அமைய இருக்கின்றன. இந்த அனுபவ மண்டபத்தை பிரதமா் மோடி கையால் திறந்து வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

அண்மையில் புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோதும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போதும் பசவண்ணருக்கு புகழாரம் சூட்டி வருகிறாா் பிரதமா் மோடி. கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வெகுவிரைவில் விடப்படும் என்றாா்.

விழாவில், விஷ்வபசவ தா்ம அறக்கட்டளையின் தலைவா் மா.க.ச.பசவலிங்க பட்டதேவரு, துணை முதல்வா் லட்சுமண் சவதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான், எழுத்தாளா் கோ.ரு.சென்னபசப்பா, கல்யாண கா்நாடக மனிதவளம், வேளாண், கலாசார சங்கத் தலைவா் பசவராஜ் பாட்டீல் சேடம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.