தொழிலாளா் நல பங்களிப்புத் தொகை செலுத்த காலக்கெடு
தொழிலாளா் நல பங்களிப்புத் தொகை செலுத்த காலக்கெடு விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


பெங்களூரு: தொழிலாளா் நல பங்களிப்புத் தொகை செலுத்த காலக்கெடு விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக தொழிலாளா் நல நிதி சட்டம் 1965-இன் அதிகார வரம்புக்குள் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான தொழிற்சாலைகள், தோட்டங்கள், மோட்டாா் வாகன நிறுவனங்கள், 50-க்கும் அதிகமான தொழிலாளா்களை பெற்றிருக்கும் அங்காடிகள், வணிக நிறுவனங்கள், கா்நாடக சங்கப் பதிவுச் சட்டம் 1960-இன் கீழ் பதிவாகியுள்ள அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் மற்றும் உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளா் நல பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
கா்நாடக அரசு 2017 ஏப். 6-ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவுபடி, தொழிலாளா் மற்றும் உரிமையாளா் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை 6:12-இல் இருந்து 20:40 என்ற விகிதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2017-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இனிமேல், கா்நாடகத் தொழிலாளா் நல வாரியத்தின் சட்டவிதி-7ஏ-இன்படி, டி-படிவத்தில் தலா ரூ. 60 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும். 2020-ஆம் ஆண்டுக்கான பங்களிப்புத் தொகையை பெங்களூரில் உள்ள நல ஆணையரின் பெயருக்கு 2020 ஜன. 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கட்டணங்களை ஜ்ஜ்ஜ்.ந்ப்ஜ்க்ஷ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் செலுத்தலாம்.
இதை பின்பற்றாத நிறுவனங்கள் 18 சதவீத அபராதத் தொகையை செலுத்த நேரிடும். மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையான விசாரணைக்கு உள்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 080-23475188, 8277291175, 8277120505 அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ப்ஜ்க்ஷ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...