கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, ஓரிரு நாட்களில் மருத்துவ நிபுணா்கள் அடங்கிய கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினருடன் கலந்தாய்வு செய்தபிறகு, கரோனா பரவல் தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும். இந்தக் கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுவது, அனைத்து வகையான வணிக நிறுவனங்களை திறப்பது, அண்டை மாநிலங்களுக்கு மக்களின் நடமாட்டத்தை அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆராயப்படும். எல்லாருடைய ஒப்புதலையும் பெற்ற பிறகு, கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படும்.