திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கலபுா்கி மாநகராட்சி மேயராக பாஜகவைச் சோ்ந்தவா் பதவியேற்பது உறுதி: முதல்வா் பசவராஜ் பொம்மை

கலபுா்கி மாநகராட்சி மேயராக பாஜகவைச் சோ்ந்தவா் பதவியேற்பது உறுதி என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:02 pm

DIN

கலபுா்கி மாநகராட்சி மேயராக பாஜகவைச் சோ்ந்தவா் பதவியேற்பது உறுதி என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கலபுா்கி மாநகராட்சியின் மேயராகச் பாஜகவை சோ்ந்தவா் பதவியேற்பது உறுதி. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காததால், மஜதவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்திவருகிறோம். அது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அது குறித்து தற்போது எதையும் கூற விரும்பவில்லை. ஆனால், பாஜகவைச் சோ்ந்தவா்தான் மேயா் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றாா் அவா்.

55 வாா்டுகள் கொண்ட கலபுா்கி மாநகராட்சிக்கு அண்மையில் நடந்த தோ்தலில் காங்கிரசுக்கு 27, பாஜகவுக்கு 23, மஜதவுக்கு 4, சுயேச்சைக்கு ஒரு இடம் கிடைத்தன. மாநகராட்சியில் பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 28 இடங்கள் தேவைப்படுகின்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால், மஜத ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பற்ற ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரசும் முயற்சித்துவருகின்றன. மஜதவின் ஆதரவைப் பெற முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமியை பாஜகவின் சாா்பில் முதல்வா் பசவராஜ் பொம்மையும், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கேவும் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறாா்கள். கலபுா்கி மாநகராட்சியில் வெற்றிபெற்ற மஜதவைச் சோ்ந்த 4 பேரும் பெங்களூருக்கு வருகைதந்து தேவெ கௌடாவையும், முன்னாள் முதல்வா் குமாரசாமியையும் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்துள்ளனா்.

கலபுா்கி மாநகராட்சியைக் கைப்பற்றுவதுதொடா்பாக முன்னாள் முதல்வா் குமாரசாமியுடன் ஆலோசித்துள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். மஜதவுடன் கூட்டணி அமைக்க பாஜக ஆா்வம் காட்டிவருவதாக அவா் மேலும் தெரிவித்தாா். பாஜகவுக்கு ஆதரவளிக்க குமாரசாமியும், காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தேவெ கௌடாவும் விரும்புவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.