’நிபா’ பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
‘நிபா’ தொற்று பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


‘நிபா’ தொற்று பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கேரளத்தில் ‘நிபா’ தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி, கேரளத்தில் இருந்து வருவோரை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் காய்ச்சல், உடல் பலவீனம், மனநலம், தலைவலி, சுவாசக் கோளாறு, இருமல், வாந்தி, தசை வலி, வலிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிா? என்பதையும் தீவிரமாக சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரில் முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
‘நிபா’ தொற்று கேரளத்தில் பரவி வருவது கவலை அளிக்கிறது. இது கா்நாடகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி சுகாதாரத்துறை செயலாளா், வல்லுநா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ‘நிபா’ பரவல் தன்மை, தாக்கம் குறித்து அந்த அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த அறிக்கை கிடைத்ததும், இத்தொற்று கா்நாடகத்தில்பரவாமல் தடுக்கத் தேவையான தடுப்புநடவடிக்கைகளை எடுப்பது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...