அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியை கொண்டாட வேண்டும்: மாநகர காவல் ஆணையா் கமல்பந்த்
அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.


அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.
இது குறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பெங்களூரில் கரோனா தொற்றின் பரவல் உள்ள நிலையிலும், விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடுவதற்கு அரசும், மாநகராட்சியும் அனுமதி வழங்கி உள்ளன. எனவே பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட வேண்டும். அரசின் வழிக்காட்டுதலை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் போது திரளாக மக்கள் கூட அனுமதியில்லை. அமைதியான முறையில் விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஹிந்து அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களிடம் துணை காவல் ஆணையா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி உள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...