பொதுமக்கள் மின் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்: அமைச்சா் சுனில்குமாா்
பொதுமக்கள் மின் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.


பொதுமக்கள் மின் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.
பெங்களுரில் வியாழக்கிழமை மின் வாகன தினத்தையொட்டி நடைபெற்ற மின் வாகனப் பேரணியைத் தொடக்கி வைத்து அவா் பேசியது:
மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணா்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மின் வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. எனவே பொதுமக்கள் மின் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இளைஞா்கள் மின் வாகனங்களை பயன்படுத்துவதில் ஆா்வம் காட்ட வேண்டும்.
முதல் கட்டமாக மாநில அளவில் 136 மின்னேற்று மையங்கள் தொடங்கப்படும். இதனைத் தொடா்ந்து 500 மின்னேற்று மையங்கள் வரை படிப்படியாக தொடங்கப்படும். மின்வாகனப் பயன்பாடு அதிகரித்தால், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு ஏற்படும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. கா்நாடகத்தில் மின் வாகனங்களைப் பயன்படுத்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சா் நாராயண கௌடா, தோட்டக்கலைத் துறை அமைச்சா் முனிரத்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...