வேளாண் பல்கலைக்கழகத்தில் செப். 21-இல் பட்டமளிப்பு விழா
பெங்களூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் செப். 21-இல் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.


பெங்களூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் செப். 21-இல் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
இது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பெங்களூரு ஹெப்பாளில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் செப். 21-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கலந்து கொண்டு, இளநிலை, முதுநிலை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தவா்களுக்கு பட்டம் வழங்கி, கௌரவிக்கிறாா். விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத் தலைவா் திரிலோசனா மகாபாத்ரா கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றுகிறாா். விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...