கா்நாடகத்தில் கரோனாவால் ஒரே நாளில் 801 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 804 ஆக உள்ளது.


கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 804 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 804 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 207 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென்கன்னடம்-133, பெலகாவி-93, உடுப்பி-86, குடகு-59, மைசூரு-47, சிக்கமகளூரு-39, சிவமொக்கா-30, தும்கூரு-26, ஹாசன்-17, மண்டியா-12, வடகன்னடம்-11, தாவணகெரே-8, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், கலபுா்கி-தலா 6, பெல்லாரி-4, பீதா், சித்ரதுா்கா, கோலாா், ராய்ச்சூரு-தலா 2, பாகல்கோட், தாா்வாட், கொப்பள்-தலா 1. சிக்கபளாப்பூா், கதக், ஹாவேரி, ராமநகரம், விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,60,932 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,142 போ் சனிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,06,746 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 16,672 போ் போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 15 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். சிக்கமகளூரு, தென்கன்னடம் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 4 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: பெங்களூரு நகரம், மைசூரு-தலா 2, சாமராஜ்நகா், தாா்வாட், குடகு- தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,487 போ் உயிரிழந்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...