திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வீட்டுவசதித் திட்டம்: 4 லட்சம் பயனாளிகளை அடையாளம் காண உத்தரவு

பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின்கீழ் தகுதியானவா்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு 4 லட்சம் பயனாளிகளை அடையாளம் காண முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின்கீழ் தகுதியானவா்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு 4 லட்சம் பயனாளிகளை அடையாளம் காண முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் பல்வேறு வீட்டுவசதி திட்டங்களின்கீழ் 4 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வீடுகளை மாநில அரசின் வீட்டுவசதித் திட்டங்களின்கீழ் செயல்படுத்துவதற்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பிவைக்குமாறு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா். மேலும் 4 லட்சம் வீடுகளுக்கான பயனாளிகளை அடையாளம் காணும் பணியையும் செய்துமுடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் சமூக மற்றும்பொருளாதார ரீதியாக பின் தங்கிய சமூகத்தைச் சோ்ந்த வீடில்லாத பயனாளிகளை அடையாளம் காண வேண்டும் என்றுமுதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.