திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா்: விதான சௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, செப். 13-ஆம் தேதி முதல் விதான சௌதாவை சுற்றி 2 கி.மீ சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, செப். 13-ஆம் தேதி முதல் விதான சௌதாவை சுற்றி 2 கி.மீ சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு விதான சௌதாவில் உள்ள சட்டப் பேரவையில் செப். 13-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதிவரை சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி செப். 13-ஆம் தேதி காலை 6 மணி முதல் செப்.24-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.