திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 889 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 889 ஆக உள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 7:06 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 889 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 889 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 263 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென்கன்னடம்-133, உடுப்பி-86, மைசூரு-74, குடகு-45, வடகன்னடம்-44, ஹாசன்-40, சிவமொக்கா-37, தும்கூரு-27, சிக்கமகளூரு-25, கோலாா்-19, மண்டியா-18, பெலகாவி-13, சித்ரதுா்கா-11, பெல்லாரி-9, தாவணகெரே-8, தாா்வாட்-7, பெங்களூரு ஊரகம்-6, கலபுா்கி-4, ராமநகரம், பாகல்கோட் தலா- 3, பீதா்- 2, கதக், ராய்ச்சூரு தலா- 1. சிக்கபளாப்பூா், ஹாவேரி, கொப்பள், விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,67,083 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,080 போ் சனிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,13,713 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 15,755 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 14 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

தென்கன்னடம், உடுப்பி தலா - 2, ஹாசன், கோலாா், சிவமொக்கா, தும்கூரு தலா- 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,587 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.