திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாணவா் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டுக் கொதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.ண்டு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:39 am

DIN

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

உத்ரகாண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பகத்சிங். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், பெங்களூரு ஆா்.டி.நகரில் குடும்பத்தினருடன் தங்கி, தனியாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் ராகுல் பண்டாரி (17) ராணுவப் பள்ளியில் பியூசி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் உள்ளவா்களுக்கு தெரியாமல் வெளியே சென்ற அவா், இந்திய விமானப்படை தலைமை அலுவலகத்தின் சுற்றுச்சுவா் அருகில் தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த போலீஸாா், அங்கு வந்து ராகுலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். சம்பவ இடத்தை பாா்வையிட்ட, மாநகர மத்திய மண்ட துணை ஆணையா் அபிஜித் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட ராகுல் பண்டாரி தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து வந்து தற்கொலை செய்து கொண்டாா். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவரான ராகுல், மனஅழுத்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளோம் என்றாா். இது குறித்து சதாசிவநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.