நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம்(என்.எஸ்.எஸ்.) அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளராக 3 ஆண்டுகள் பணியாற்ற பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியை ஏற்க விரும்பும் ஆசிரியா்கள் ட்ற்ற்ல்ள்://க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை உரிய துறைத் தலைவா் அல்லது கல்லூரி முதல்வா் மூலம் பதிவாளா், பெங்களூரு பல்கலைக்கழகம், ஞானபாரதி வளாகம், பெங்களூரு-560056 என்ற முகவரிக்கு அக். 18-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...