திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நேரம் காலை 10 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 7:08 pm

DIN

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நேரம் காலை 10 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம், பெங்களூரு வடக்கு - தெற்கு பகுதியின் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு - மேற்கு பகுதியின் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலான ஊதா வழித்தடமும், நாகசந்திரா முதல் பட்டுவாரியம் வரையிலான பச்சை வழித்தடமும் இயக்கப்பட்டு வருகிறது.

கரோனா காரணமாக, இதுவரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, சனிக்கிழமை முதல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சனி, ஞாயிறு நீங்கலாக, வார நாள்களில் பையப்பனஹள்ளி, கெங்கேரி, நாகசந்திரா, பட்டுவாரியம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.30 மணியளவில் கடைசி சேவை ரயில் இயக்கப்படும்.

ஊதா தடம் மற்றும் பச்சைத் தடத்தில் பயணிகள் வருகை அதிகம் இருக்கும் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை, சாதாரண நேரத்தில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. கெங்கேரி முதல் பட்டுவாரியம் வரையிலான தடத்தில் நாள்முழுவதும் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சனி, ஞாயிறு, பொதுவிடுமுறை நாள்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கிருமிநாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.