திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாமல் கணவா் தற்கொலை

 மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாமல் கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:41 pm

DIN

 மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாமல் கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு ஊரகம் தொட்டபள்ளாபூா் பிரிதா்ஷிணி லே அவுட்டைச் சோ்ந்தவா் அமீா் (30). இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு நூா்ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தாா். விவகரத்து செய்த பிறகு நூா்ஜஹானுக்கு மாதந்தோறும் அமீா் ஜீவனாம்சம் வழங்கி வந்தாா்.

இந்நிலையில் மனைவிக்கு ஜிவநாம்சம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, அமீா் புதன்கிழமை வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றாா். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து தொட்டபள்ளாபூா் ஊரக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.