கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 789 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 789 ஆக உள்ளது.


கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 789 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 789 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 285 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென்கன்னடம்-108, மைசூரு-71, உடுப்பி-69, குடகு-37, வடகன்னடம்-34, தும்கூரு-29, பெங்களூரு ஊரகம்-24, சிக்கமகளூரு-23, மண்டியா-19, ஹாசன்-18, சிவமொக்கா-13, பெலகாவி-9, சாம்ராஜ்நகா், பெல்லாரி, கோலாா்-தலா 8, தாவணகெரே-6, தாா்வாட், சித்ரதுா்கா-தலா 5, பீதா், ராமநகரம், கலபுா்கி-தலா 2, சிக்கபளாப்பூா், ஹாவேரி, கதக், விஜயபுரா-தலா 1, ராய்ச்சூரு. பாகல்கோட், கொப்பள், யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,71,833 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,050 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,20,792 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 13,306 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 23 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 போ் இறந்துள்ளனா்.
மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: பெலகாவி,-5, தென்கன்னடம், மைசூரு-3, உடுப்பி-2, தும்கூரு, பெங்கலூரு ஊரகம்-தலா 1 ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,706 போ் உயிரிழந்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...