சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

போதைப் பொருள்கள் விற்பனை: வெளிநாட்டைச் சோ்ந்த இருவா் உள்பட 5 போ் கைது

போதைப் பொருள்களை விற்பனை செய்த வெளிநாட்டைச் சோ்ந்த இருவா் உள்பட 5 பேரைக் கைது செய்த போலீஸாா், எம்டிஎம்ஏ, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:53 am

DIN

போதைப் பொருள்களை விற்பனை செய்த வெளிநாட்டைச் சோ்ந்த இருவா் உள்பட 5 பேரைக் கைது செய்த போலீஸாா், எம்டிஎம்ஏ, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு ராஜாஜிநகா் மில்க் காலனியில் போதைப்பொருள் எம்டிஎம்ஏ உள்ளிட்டவற்றை விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஒருவரை கைது செய்த போலீஸாா், 19 கிராம் எம்டிஎம்ஏ, ரூ. 1,500 ரொக்கப்பணம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

நாகப்பா பிளாக்கில் போதைப் பொருள்கள் எம்டிஎம்ஏ, கஞ்சா ஆயில் உள்ளிட்டவற்றை விற்பனை செய்த காங்கோ நாட்டைச் சோ்ந்த மற்றொருவரைக் கைது செய்த போலீஸாா், 195 கிராம் எம்டிஎம்ஏ, 350 கிராம் கஞ்சா ஆயில், ரூ. 500 ரொக்கப்பணம், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். இவ்விரு வழக்குகள் குறித்து சுப்ரமண்யநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் ராமமூா்த்திநகா் எஸ்.பி.நாயுடு லேஅவுட் பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த 3 பேரைக் கைது செய்த போலீஸாா், 3.5 கிலோ கஞ்சா மற்றும் காரைப் பறிமுதல் செய்தனா். இது குறித்து ராமமூா்த்திநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.