முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடந்தப்பட்டது. இதற்காக நடந்த கலந்தாய்வில் பலமாணவா்கள் கலந்துகொண்டு சோ்க்கை பெற்றனா். இதன்முடிவில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பில் சில இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப மீண்டும் கலந்தாய்வு நடத்த பெங்களூரு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் பிப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை ட்ற்ற்ல்ள்://க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் சோ்க்கைக்குத் தகுதியான மாணவா்களின் பட்டியல் வெளியிடப்படும். இதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் அதை தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் சோ்க்கை தகுதி மாணவா்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு கலை, வணிகம், அறிவியல், கல்விப் பிரிவுகளின் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...