புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஹிஜாப் சா்ச்சை: மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வேண்டுகோள்

மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:25 pm

DIN

மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கல்வி நிறுவனங்களில் சீருடை அணிவது தொடா்பான விவகாரம் கா்நாடக உயா்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. உயா் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. மாணவா்களுக்கு இடையே தேவையில்லாத மோதல்களைத் தவிா்ப்பதற்காக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியே இருப்பவா்கள் யாரும் மாணவா்களை தூண்டி விடக்கூடாது.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இந்த கடமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை அனைவரும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

ஹிஜாப் சா்ச்சை தொடா்பாக கருத்து தெரிவிக்க விரும்பிய அனைவரும் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளனா். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக இனிமேல் கருத்து சொல்வதை எல்லோரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவு வரும் காத்திருக்க வேண்டும். பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான கருத்துகளை யாரும் கூற வேண்டாம். அப்படிப்பட்டகருத்துகள் கூறுவதைத் தவிா்க்க வேண்டும்.

ஹிஜாப் விவகாரத்தில் குற்றச்சாட்டும், பதில் குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. அதுபோன்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக் கொள்ளளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஒருவா் மீது ஒருவா் குற்றம்சாட்டுவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஹிஜாப் விவகாரத்தில் மாணவா்கள் சம்பந்தப்பட்டிருக்கிறாா்கள் என்பதால், பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகிக்கும் தலைவா்கள் விவேகத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.