நடிகை அனிஷ்மா நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகையான அனிஷ்மா அனில்குமார் பூவன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, தெக்கு வடக்கு, ஐயம் காதலன் உள்ளிட்ட திரைப்படங்களில் கவனிக்கப்பட்டவர் தமிழில் சிறை திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றிப்படமாக மாறியது. முக்கியமாக, இதில் அனிஷ்மாவின் நடிப்பு அதிக பாராட்டுகளைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் கென்னுடன் யூத் திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிறை மற்றும் யூத் படங்களில் அனிஷ்மா
இதனால், யூத் திரைப்படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் கவனிக்கப்பட்டிருந்தாலும் தமிழில் சிறை, யூத் படங்களின் மூலம் வெற்றி கதாநாயகி என்கிற பெயரை அனிஷ்மா பெற்றுள்ளார். தமிழுக்கு ஏற்ற முகவெட்டும் இருப்பதால் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
actor anishma anilkumar becoming a hit actress in youth followed by sirai movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புசாமி, கரசாமி யாருக்கு வெற்றி?

அடுத்தடுத்து ரூ. 100 கோடி! அசத்தும் மலையாளத் திரைத்துறை!

5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் மமிதா பைஜூ!

வசூலில் பட்டையைக் கிளப்பும் ஆடு - 3!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


