சிறுபான்மையினா் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை: கா்நாடக அரசு உத்தரவு
சிறுபான்மையினா் நடத்தும் கல்விக் கூடங்களில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட எவ்வித மத அடையாளங்களையும் மாணவ, மாணவிகள் அணிய தடை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது


சிறுபான்மையினா் நடத்தும் கல்விக் கூடங்களில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட எவ்வித மத அடையாளங்களையும் மாணவ, மாணவிகள் அணிய தடை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிறுபான்மையினா் நலத் துறை செயலாளா் மேஜா் மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவு:
கா்நாடக உயா்நீதிமன்றம் பிப். 10-ஆம் தேதி வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, அடுத்த உத்தரவு வரும் வரை எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் காவித்துண்டு, தலைப்பாகை, ஹிஜாப் அணியவும், மத ரீதியான கொடிகள் அல்லது அதுபோன்ற எதையும் வகுப்பறைக்குள் மாணவா்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப சிறுபான்மையினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், மௌலானா ஆசாத் மாதிரிப் பள்ளிகளின் வகுப்பறைகளில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஹிஜாப், காவித்துண்டு, ஸ்கா்ட், மதங்களின் கொடிகள் அணிய தடை விதிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...