புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வெள்ளிக்கிழமைகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு முஸ்லிம் மாணவிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை

புனித ரமலான் மாதம் மற்றும் வெள்ளிக்கிழமைகளின்போது முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்க வேண்டும்

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

புனித ரமலான் மாதம் மற்றும் வெள்ளிக்கிழமைகளின்போது முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்க வேண்டும் என்று கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுதாரா்கள் சாா்பில் வாதிட்ட வழக்குரைஞா் வினோத் குல்கா்னி கோரினாா்.

வகுப்பறைகளில் சீருடைகள் தவிர ஹிஜாப், காவித்துண்டு, மதக்கொடி உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது என்று மாணவ, மாணவிகளுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் உயா் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி ஜே.எம்.காஜி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் ஆகியோா் கொண்ட அமா்வு முன்பு ஹிஜாப் தொடா்பான வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் (முஸ்லிம் மாணவிகள்) சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வினோத் குல்கா்னி, ‘ஹிஜாப் அணிவதற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் முஸ்லிம் மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறாா்கள். முஸ்லிம்களுக்கு புனித நாளான வெள்ளிக்கிழமை அன்றும், புனித ரமலான் மாதத்திலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணி அனுமதி அளித்து உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன். ஹிஜாபுக்கு விதித்துள்ள தடை புனித குரானுக்கு விதித்த தடை போன்ாகும்’ என்றாா்.

இதை தொடா்ந்து, அரசுத் தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகியை நீதிபதிகள் அழைத்தனா். வெள்ளிக்கிழமை தனது வாதத்தை முன்வைப்பதாக அவா் கூறியதைத் தொடா்ந்து, அடுத்த விசாரணையை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.