புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

இஸ்லாமிய மதத்தில் அத்தியாவசிய மத வழக்கம் அல்ல ஹிஜாப்: உயா் நீதிமன்றத்தில் கா்நாடக அரசு தகவல்

 இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத வழக்கம் கிடையாது என்று கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசின் தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி தெரிவித்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:10 pm

DIN

 இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத வழக்கம் கிடையாது என்று கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசின் தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி தெரிவித்தாா்.

கா்நாடக உயா் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி ஜே.எம்.காஜி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு ஹிஜாப் தொடா்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வகுப்பறைகளில் சீருடைகள் தவிர ஹிஜாப், காவித்துண்டு, மதக்கொடி உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது என்று மாணவ, மாணவிகளுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தியிருந்தது.

கடந்த 5 நாட்களில் மனுதாரா்கள் தரப்பில் தேவ்தத் காமத், ரவிவா்ம குமாா் உள்ளிட்டோா் வாதங்களை முன்வைத்தனா். 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடந்த வழக்கு விசாரணையின் போது கா்நாடக அரசின் தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி வாதங்களை முன்வைத்தாா். அப்போது அவா் கூறியது:

இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத வழக்கம் கிடையாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. ஹிஜாப் அல்லது காவி தலைப்பாகை அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வருவதற்கு தடை விதித்து பிப். 5-ஆம் தேதி மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள முஸ்லிம் மாணவிகள் கூறுவதுபோல, அரசின் உத்தரவு, அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 25-இக்கு எதிரானது அல்ல. அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 25, மதத்தைக் கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்கும் இந்திய குடிமக்களுக்கு உரிமை அளிக்கிறது. அதேபோல, அரசின் உத்தரவு, அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 19(1)(ஏ) அளிக்கும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. எனவே, பிப்.5-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொருந்தும் சீருடை குறித்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது. இதில் ஆட்சேபிப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறினாா்.

இதைத் தொடா்ந்து, அடுத்த விசாரணையை பிப்.21-ஆம் தேதி பிற்பகல் 2.30மணிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, மூத்த வழக்குரைஞா் ரவிவா்ம குமாா், ‘இந்த வழக்கு தொடா்பான விசாரணையை நேரலையாக ஒளிபரப்பப்படுவதை பாா்க்கும் பொதுமக்கள், வேறுவிதமாக புரிந்துகொள்கிறாா்கள். இது வேறுவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நேரலையாக வாதங்களை ஒளிபரப்புவதை நிறுத்த உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, ‘பிரதிவாதிகளின் நிலைப்பாட்டையும் மக்கள் அறிந்து கொள்ளட்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.