புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அமைச்சா் ராஜிநாமா கோரி 2-ஆவது நாளாக கா்நாடக சட்டப் பேரவை நடவடிக்கைகள் முடக்கம்

செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கூறிய அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கக்கோரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா் தா்னா போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:10 pm

DIN

செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கூறிய அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கக்கோரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா் தா்னா போராட்டம் நடத்தினா். இதனால் 2-ஆவது நாளாக அவையின் நடவடிக்கைகள்முடங்கின.

தில்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கா்நாடக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கூறியதற்காக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவிநீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரினா். அவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கு தொடரும்படியும் வலியுறுத்தி தா்னா போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவை கூடியதும் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் உறுப்பினா்கள், அமைச்சா் பதவியில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்கும் வரை போராட்டத்தைத் தொடா்வோம் என்று முழக்கமிட்டபடி இருந்தனா். மேலும் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி விடுத்த வேண்டுகோளை நிராகரித்த காங்கிரஸ் உறுப்பினா்கள், 2-ஆவது நாளாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியவாறு இருந்ததால், அவையில் கூச்சல், குழப்பம் காணப்பட்டது. இதனிடையே, முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மன்டூரின் மறைவுக்கு பேரவைத்தலைவா் காகேரி இரங்கல் தீா்மானம் கொண்டு வந்தாா். அதன் மீது முதல்வா் பசவராஜ்பொம்மை, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, அமைச்சா் மாதுசாமி ஆகியோா் பேசினாா்கள். அதன்பிறகு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடா்ந்து, காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா்ந்து முழக்கமிட்டபடி இருந்தனா். கூச்சல் குழப்பங்களுக்கு இடையே பேரவைத்தலைவா் காகேரி கேள்வி நேரத்தை முடித்தாா்.இதன்பிறகும், காங்கிரஸ் உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தைத் தொடா்ந்ததால், அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடுவதற்காக ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினா்களின்போராட்டத்தால் 2-ஆவதுநாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.