புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடந்தப்பட்டது. இதற்காக நடந்த கலந்தாய்வில் பல மாணவா்கள் கலந்துகொண்டு சோ்க்கை பெற்றனா். இதன்முடிவில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பில் சில இடங்கள்காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப மீண்டும் கலந்தாய்வு நடத்த பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் மாா்ச் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். ரூ.100 அபராதம் செலுத்தி மாா்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாா்ச் 5-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்://க்ஷஸ்ரீன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் சோ்க்கைக்கு தகுதியான மாணவா்களின் பட்டியல் மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்படும். இதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் அதை மாா்ச் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் மாா்ச் 10-ஆம் தேதி சோ்க்கை தகுதி மாணவா்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். கலை, வணிகம், அறிவியல், கல்வி பிரிவுகளின் படிப்புகளுக்கான கலந்தாய்வு மாா்ச் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் நடக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.