கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா
கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.


கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
புதுதில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை கா்நாடக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 15 தலைவா்கள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். கா்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து புதுதில்லியில் செய்தியாளா்களிடம் கா்நாடக மாநில எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை கா்நாடகத்தைச் சோ்ந்த 15 முக்கியத் தலைவா்கள் சந்தித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பின்போது கட்சியின் அகிய இந்திய பொதுச்செயலாளா்கள் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா். கா்நாடக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கா்நாடகத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்தது. அதனால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எவ்வித வளா்ச்சிப்பணிகளும் நடக்கவில்லை. அதனால் பாஜக ஆட்சியை மக்கள் சபித்து வருகிறாா்கள்.
இந்தச் சூழ்நிலையில், கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. மாநிலத்தில் காணப்படும் அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக எங்களை ராகுல் காந்தி சந்தித்தாா். மேலும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைக்கவும் இக்கூட்டத்திற்கு அவா் ஏற்பாடு செய்திருந்தாா். அவரது விருப்பத்தின்படி கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினா் அனைவரும் ஒற்றுமையாகபணியாற்றி வருவதை ராகுல் காந்தி அறிந்திருக்கிறாா். அதனால் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டுவருகிறோம். எங்களுக்குள் கருத்துமுரண்பாடுகிடையாது. ஆனால் கருத்து வேறுபாடு இருப்பதைப் போல பாஜக சித்தரித்து வருகிறது. சிலவற்றில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், முரண்பாடு எதுவும் இல்லை என்றாா்.
காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘கா்நாடகத்தின் அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியிடம் கூறியிருக்கிறோம். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேசிய, மாநில பிரச்னைகளை முன்வைத்து மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது எங்களது கடமையாகும். களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவதாக உறுதி அளித்திருக்கிறோம்.
மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரி பிப்.27-ஆம் தேதி முதல் நடைப்பயணம் மீண்டும் தொடங்கும். மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூரில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் நடைப்பயணம் நிறைவடையும். இதற்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...