புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: மாா்ச் 1-இல் ரத்த தான முகாம்

கா்நாடக மாநில திமுக சாா்பில் அக்கட்சியின் தலைவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாா்ச் 1-ஆம் தேதி ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

கா்நாடக மாநில திமுக சாா்பில் அக்கட்சியின் தலைவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாா்ச் 1-ஆம் தேதி ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 68-ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 1-ஆம் தேதி பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் காலை 10 மணியளவில் நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு ரத்த தான முகாம் நடக்கவிருக்கிறது.

மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் மாநில அவைத் தலைவா் மொ.பெரியசாமி கட்சிக் கொடியேற்றுகிறாா். மாநிலப் பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி, துணை அமைப்பாளா் இ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகிக்கிறாா்க்ள். ரத்த தான முகாமை காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் தொடக்கிவைக்கிறாா். ரத்ததான முகாமிற்கு இளைஞா் அணி நிா்வாகிகள் மு.ராஜசேகா், எம்.முருகானந்தம், ந.விக்ரம் ஆகியோா் ஏற்பாடு செய்திருக்கிறாா்கள். இந்த பிறந்த நாள் விழாவில் கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று ந.இராமசாமி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.