புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மாா்ச் 12-இல் இணையவழி தேசிய மக்கள் நீதிமன்றம்

 கா்நாடகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மாா்ச் 12-ஆம் தேதி இணையவழி தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:56 pm

DIN

 கா்நாடகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மாா்ச் 12-ஆம் தேதி இணையவழி தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்கள் நீதிமன்றங்கள்(லோக் அதாலத்) மூலம் விரைவான மற்றும் செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, தேசிய மக்கள் நீதிமன்றங்களை மாதந்தோறும் நடத்தி வழக்குகளைத் தீா்த்துவைக்க முடிவு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத மனுக்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

கா்நாடக மாநில சட்ட சேவை ஆணையத்தின் சாா்பில் கா்நாடகம் முழுவதும் மாா்ச் 12-ஆம் தேதி மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலான சட்டசேவை மையங்கள் அல்லது தாற்காலிக மக்கள் நீதிமன்றங்களை அணுகி வழக்குகள் மீது தீா்வுகளை பெற்றுக் கொள்ளலாம். கரோனா காரணமாக மக்கள் நீதிமன்றங்கள் இணையவழியில் செயல்படும். நேரிலும் வர தடையில்லை.

மோட்டாா் வாகன விபத்து இழப்பீடுகள், காப்பீடுகள், வருவாய் வழக்குகள், திருமண சிக்கல்கள், தொழிலாளா் பிரச்னைகள், நில கையகப்படுத்தல் பிரச்னைகள், பணி ஓய்வு பிரச்னைகள், மின்சாரம் மற்றும் குடிநீா் பிரச்னைகள், சிறுகுற்றங்கள், வங்கிக் கடன் நிலுவைகள், கடன் வசூல், வாடகை உள்ளிட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது குறித்து கூடுதல் தகவல்களைப் பெற சட்ட உதவிமையம், எச்.சித்தையா சாலை, பெங்களூரு என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம். இதுதவிர, 080-22249799, 7338561768 என்ற தொலைபேசி, இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.