கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 8,449 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,449 ஆக உள்ளது.


கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,449 ஆக உள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் 8,449 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 6,812 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: மைசூரு- 219, தென்கன்னடம்- 211, உடுப்பி-148, மண்டியா- 129, பெலகாவி- 114, கோலாா்-98, கோலாா்-96, தும்கூரு-96, ஹாசன்-89. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,31,052 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 505 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,62,548 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 30,113 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 38,362 ஆக உயா்ந்துள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 4.15 சதவீதமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...