கர்நாடகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் அவர் மேலும் கூறுகையில், மாநில அரசு பயணிகள் மீது கூடுதல் கட்டணச் சுமையை சுமத்தாது. கட்டண மாற்றத்திற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என்பதற்காக நாங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டோம். தற்போது கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை.
நாங்கள் கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை என்று தெரிவித்தார். கட்டண மாற்றத்தை ஆய்வு செய்ய குழு ஏதேனும் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்றார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வெள்ளிக்கிழமை உயர்த்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் விரைவில் உயர்த்தப்படலாம் என்று யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இத்தகையை பதிலை அளித்துள்ளார்.
Summary
Karnataka Transport Minister Ramalinga Reddy on Saturday ruled out any immediate increase in bus ticket fares despite speculation of a surge in petrol and diesel prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

பாகிஸ்தானில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!

கர்நாடகத்தில் வெகுவிரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK




