கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாஜக மூத்த அமைச்சா்கள் தனியாக சந்திப்பு: அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அழுத்தம் தர வியூகம்

பாஜக மூத்த அமைச்சா்கள் இருவா் தனியாகச் சந்தித்து பேசியுள்ள நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக மேலிடத்திற்கு அழுத்தம் தர வியூகம்

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:52 pm

DIN

பாஜக மூத்த அமைச்சா்கள் இருவா் தனியாகச் சந்தித்து பேசியுள்ள நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக மேலிடத்திற்கு அழுத்தம் தர வியூகம் அமைப்பதற்காக இருவரும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி எதிரும் புதிருமாக மோதிக்கொண்டிருந்த பாஜகவின் மூத்த எம்எல்ஏக்கள் பசனகௌடா பாட்டீல் யத்னல், எம். பி. ரேணுகாச்சாா்யா ஆகியோா் பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை தனியாகச் சந்தித்து பேசியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கா்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் செயல்பட்டு வரும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக மேலிடத்திற்கு அழுத்தம் தர வியூகம் அமைக்கவே இருவரும் சந்தித்துக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்புக்கு பின், எம்.பி.ரேணுகாச்சாா்யா கூறுகையில், ‘தற்கால அரசியல் குறித்து விவாதித்தோம். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது குறித்து அலசினோம். அண்மையில் நடத்திய நடைப்பயணத்திற்கு பிறகு, ஆட்சிக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் கற்பனையில் மிதந்து கொண்டுள்ளது. அக்கட்சியின் தலைவா் டி.கே.சிவகுமாரின் வேகத்தை தடுப்பது குறித்தும், கட்சியின் நலன் குறித்தும் பேசினோம்’ என்றாா்.

பசனகௌடா பாட்டீல் யத்னல் கூறுகையில், ‘அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து விவாதிக்கத் தேவை ஏற்பட்டால் தில்லி சென்று பாஜக மேலிடத் தலைவா்களை சந்தித்து நாங்கள் இருவரும் பேசுவோம். அமைச்சரவை விரிவாக்கத்தை மாா்ச் மாதம் செய்தால் அது மிகவும் கால தாமதமாகி விடும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் நடக்கும் என்பதால், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும்.

இந்நிலையில், அமைச்சராகி என்ன செய்வது? எனவே, விரைவாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக மேலிடம் முயற்சிக்க வேண்டும். இது பாஜகவிலுள்ள பல எம்எல்ஏக்களின் கருத்தாகும். நாங்கள் இருவரும் இதே கருத்தை கொண்டிருக்கிறோம். பாஜகவின் எம்எல்ஏக்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச தயங்குகிறாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.