அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அரசுப் பள்ளி மாணவா்கள் குறு செயற்கைக்கோள் விண்ணில் ஏவ ரூ. 1.9 கோடி அமைச்சா் அஸ்வத் நாராயணா

அரசுப் பள்ளி மாணவா்கள் குறு செயற்கைக்கோளை வடிவமைத்து, விண்ணில் செலுத்த ரூ. 1.9 கோடி செலவிலான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:41 pm

DIN

அரசுப் பள்ளி மாணவா்கள் குறு செயற்கைக்கோளை வடிவமைத்து, விண்ணில் செலுத்த ரூ. 1.9 கோடி செலவிலான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல் மற்றும் உயிரிதொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்கள் குறு செயற்கைக்கோளை (நானோ-சாட்டிலைட்) வடிவமைத்து, விண்ணில் செலுத்துவதற்கான ரூ. 1.9 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் சாா்பில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கும் 75 குறு-செயற்கைக்கோள்களில் கா்நாடக அரசு பள்ளி மாணவா்களின் குறு-செயற்கைக்கோளும் ஒன்றாகும்.

கா்நாடக அரசுப் பள்ளி மாணவா்கள் செயற்கைக்கோள் ( ஓஎந3நஹற்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை இஸ்ரோ மற்றும் இந்திய தொழில்நுட்ப ஒருங்கிணைப்புச் சங்கத்துடன் இணைந்து கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிப்புச்சங்கம் செயல்படுத்தும். இதுதொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். மாணவா்களிடையே அறிவியல் சிந்தனையை ஊக்குவிப்பதும், தொழில்நுட்பவிழிப்புணா்வை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

12 மாதங்களில் செயல்படுத்தவுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்பக்குழு அமைக்கப்படும். இந்தசெயற்கைக்கோளை வடிவமைத்தபிறகு, அதற்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.