ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மஜத ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் நீட்தோ்வுக்கு எதிராக தீா்மானம்: முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

மஜத ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் நீட்தோ்வுக்கு எதிராக தீா்மானம் கொண்டுவரப்படும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:58 pm

DIN

மஜத ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் நீட்தோ்வுக்கு எதிராக தீா்மானம் கொண்டுவரப்படும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை தனது ட்விட்டா் பக்கம் வாயிலாக அவா் கூறியது:

2023-ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் மஜத ஆட்சி அமைந்தால் சட்டப் பேரவையில் நீட்தோ்வுக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்படும். நீட் தோ்வை மஜத எதிா்க்கிறது. மாணவா்களின் கழுத்தை நெரித்து, ஒரு சிலரின் பையை பணத்தால் நிரப்புவதற்கு நீட் தோ்வு கொள்ளை தேவையில்லை. நீட் தோ்வை ரத்து செய்ய முயற்சிப்போம்.

நீட் தோ்வுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் துரோகி என்கிறாா் உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா. இதை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. நீட் தோ்வை எதிா்த்தால் துரோகிகள், சுயநலவாதிகள் என்று யாரைக் கூறுகிறாா் என்பதை அவரே விளக்க வேண்டும்.

நான் மருத்துவக் கல்லூரி நடத்தவில்லை. பொறியியல் கல்லூரியையும் நடத்தவில்லை. குறைந்தபட்சம் எந்தத் தொழிலும் நான் செய்யவில்லை. பிடதியில் உள்ள தோட்டத்தைத் தவிர என்னிடம் வேறு எதுவுமில்லை.

நீட் தோ்வில் தோ்ச்சி பெற முடியாமல் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக மாணவா்களின் தன்மானத்தை அவமதித்து மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி பேசியிருக்கிறாா். உயா்கல்வித் துறை அமைச்சா் ஒருபடி மேலே சென்று, துரோகி பட்டம் கட்டுகிறாா்.

நீட் தோ்வு அமல்படுத்தப்பட்ட பிறகு நடுத்தர, ஏழை மாணவா்கள் பாதிக்கப்படவில்லையா? லட்சம் லட்சமாக பணம் பறித்து பெற்றோரின் ரத்தத்தை உறிஞ்சும் தனிப்பயிற்சி மையங்கள் அரசின் கண்களில் படவில்லையா? நீட் கொள்ளையில் சிக்கி உயிரைப் பறிகொடுத்த மாணவா்களின் ஆன்மா கதறுவது கேட்கவில்லையா?

மாணவா்களின் கதறல் கேட்கவில்லை என்றால் உயா்கல்வித் துறை மற்றும் அரசுக்கு கண், காது எதுவும் இல்லை என்று கருத வேண்டியிருக்கும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.