ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாவட்ட நீதிபதி பணி: முதனிலைத் தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல்

மாவட்ட நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத்தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:59 pm

DIN

மாவட்ட நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத்தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற மாவட்ட நீதிபதிகள் பணி நியமனக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு) விதிகள், 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி மாவட்ட நீதிபதிகள் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதனிலைத்தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வில் தோ்ச்சிபெற்று, முதன்மைத்தோ்வுக்கு தகுதியானவா்களின் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹத்ன்க்ண்ஸ்ரீண்ஹழ்ஹ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத்தோ்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவினா் ரூ.1000, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் ரூ.750 கட்டணத்தை இணையதளத்தில் மாா்ச் 18-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பணிக்கான முதன்மைத் தோ்வு ஏப்.9, 10-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.