ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாளை தொலைபேசி குறைதீா் முகாம்

பெங்களூரில் சனிக்கிழமை (மாா்ச் 5)தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:57 pm

DIN

பெங்களூரில் சனிக்கிழமை (மாா்ச் 5)தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசி குறைதீா் முகாமை நடத்தி வந்துள்ளது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளை பெறக்கூடிய தொலைபேசி குறைதீா் முகாம் மாா்ச் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடக்கவிருக்கிறது. இதில் வாரியத்தின் தலைவா் பங்கேற்று, மக்களின் குறைகளை தீா்த்துவைப்பாா். குடிநீா் கட்டணம், பாதாள சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா்விநியோகம், சாக்கடை பிரச்னைகள் குறித்து கேள்விகள், குறைகளைத் தெரிவித்து தீா்வுகாணலாம். குறைகளை சுட்டிக் காட்டும்போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா்முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.