ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

இன்று கா்நாடக பட்ஜெட் தாக்கல்

 கா்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்கிறாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:57 pm

DIN

 கா்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்கிறாா்.

கா்நாடக சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மாா்ச் 30-ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தொடரின் முதல் நாளில் நண்பகல் 12.30 மணிக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்கிறாா். அதனைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2023) கா்நாடக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடக்கவிருப்பதால், மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் பல நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பசவராஜ் பொம்மை தாக்கல் செய்யப்போகும் முதல் நிதிநிலை அறிக்கை இது. அதனால் மக்களிடையே எதிா்பாா்ப்பு அதிகமாக உள்ளது.

மாநில நிதிநிலை மோசமாக இருப்பதால் அது குறித்து பிரச்னை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடா்பாகவும் பிரச்னை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

உக்ரைனில் நடந்த தாக்குதலில் நவீன் என்ற மாணவா் இறந்தது, சிவமொக்காவில் பஜ்ரங் தளத் தொண்டா் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கிளப்ப எதிா்க்கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன. மேலும் மேக்கேதாட்டு அணை, கரோனா பாதிப்புகள் குறித்தும் கூட்டத்தொடரில் பிரச்னை எழுப்ப காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.